Skip to main content

டெஸ்ட் பர்சேஸ் முறையை நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

lk

 

டெஸ்ட் பர்சேஸ் என்ற புதிய வரிவிதிப்பு முறையை எதிர்த்தும், அதனை முழுவதுமாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றது.

 

hjk

 

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட வணிகர்கள் இதுதொடர்பாக பேசும்போது, " சிறு வணிகர்களைக் குறிவைத்து இந்த வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது வியாபாரிகளைப் பெரிய அளவில் தொழில் ரீதியாகப் பாதிக்கிறது. சிறு வணிகர்களால் முறையாகப் பில்களை பராமரிக்க முடியாது. அதன் காரணமாக அவர்கள் வரியுடன் சேர்த்து விற்பனை செய்யும் பொருட்களையே விற்கிறார்கள். எனவே இதனைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்கு வரி விதிப்பு அபராதம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதனைத் தடுக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக அரசுக்குக் கோரிக்கை வைக்கிறோம். அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
 

 

சார்ந்த செய்திகள்