தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பம் கடந்த 12 வருடங்களாக குவித்துள்ள சொத்துக்கள் குறித்து டிசம்பர் 2017-லில் அறப்போர் இயக்க கொடுத்த புகார் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது.
அறப்போர் இயக்கம் கடந்த டிசம்பர் 12, 2017-ஆம் ஆண்டு ஆதாரத்துடன் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் (DVAC) புகாரளித்தது. இந்தப் புகாரை டி.வி.ஏ.சி தலைமை செயலருக்கு அனுப்பியது. இந்தப் புகாரில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலரிடம் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட ஆர்.ஐ.டிக்களுக்கு எந்த விளக்கமும் தரப்படாததால் பன்னீர்செல்வம் முறைகேடாக குவித்த சொத்துக்கள் குறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது.