Skip to main content

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் குண்டுக்கட்டாக கைது

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

Nurses involved in the protest were arrested

 

தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை தேனாம்பேட்டையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் செவிலியர்கள் குண்டுக்கட்டாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பணி நிரந்தரம் செய்வது; நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய நிரந்தரப் பணியிடங்களை உருவாக்குவது; ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்குவது உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றும், குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும் காவல்துறை வாகனத்தில் ஏற்றிக் கைது செய்தனர். சுமார் 500 செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே சென்னை டிபிஐ வளாகத்தில் சம ஊதியம் வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்