ஈரோடு ரயில்வே காலனியில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. ஈரோட்டில் இது மிகவும் பிரபலமானது. வாரத்தின் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள் குறிப்பாக பெண் பக்தர்கள் அதிகம். இப்போது கொரோன வைரஸ் காரணமாக ஈரோடு மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி கோவிலில் விசேஷ பூஜைகள், பஜனைகள், திருமண வைபவங்கள் மற்றும் பிரசாதங்கள், அன்னதானங்கள் வழங்குவது என அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்த்து அவரவர்கள் வீட்டிலேயே பிராத்தனைகள் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி அப்படியும் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு உடனே செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம் என இந்த ஈரோடு சீரடி சாய்பாபா கோவில் முன்பு விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது.
அர்சனையில்லை, அபிஷேகமில்லை, பிராத்தனைகள் இல்லை.,பஜனைகள் இல்லை. ஏன் பிரசாதங்களே இல்லை. மொத்தத்தில் கோயிலில் எதுவும் இல்லை என்பது போல் விஞ்ஞான யுகத்தில் வந்துள்ள கொரோன வைரஸின் தாக்கம்.