Published on 26/02/2020 | Edited on 26/02/2020
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறைச்சாலையிலிருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் இம்மூவரும் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, அடுத்த மார்ச் 12-ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தவிட்டார்.