மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று (12.11.2018) இந்த வழக்கில் 3 பேரையும் ஆஜர்படுத்த மதுரையில் இருந்து காவல்துறையினர் அவர்களை அழைத்து வந்தனர்.
வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி லியாகத் அலி, நாளை (13.11.2018) விசாரணை நடத்தப்படும் என்றும், 3 பேரையும் நாளை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட முருகனிடம், ''நிர்மலா தேவி வழக்கிற்குப் பின்னால் சதி இருக்கிறதா?'' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''ஆமாம்'' என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.
படங்கள்: அண்ணல், ராம்குமார்