Skip to main content

9 இடங்களில் என்ஐஏ சோதனை.. .சதி திட்டத்திற்கான வரைபடங்கள், ஆவணங்கள் சிக்கியது!?

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

NIA

 

ஐ.எஸ்.ஐ பயங்கரவாத அமைப்புடன் நேரடித் தொடர்பிலிருந்த சாதிக் பாட்ஷா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சாதிக் பாட்ஷாவிற்கும் அவரது கூட்டாளிகளுக்கும் தொடர்புடைய 9 இடங்களில் இன்று என்.ஐ.ஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்தியது. சென்னை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள 9 இடங்களில் நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதற்காக சதி திட்டம் தீட்டியதற்கான வரைபடங்கள், ஆவணங்களை என்.ஐ.ஏ கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே சாதிக் பாட்ஷா (38) அவரது நண்பர்கள் இலந்தன்குடியை சேர்ந்த ஜெஹபர் அலி (58), கோவையைச் சேர்ந்த முகமது ஆஷிக்(29), காரைக்காலை சேர்ந்த முகமது இர்பான் (22), சென்னை அயனாவரத்தை சேர்ந்த ரஹ்மத் (29) உள்ளிட்ட ஐந்து பேரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ்.ஐ அமைப்புடன் நேரடி தொடர்பிலிருந்த இவர்கள் அந்த அமைப்புக்கு நிதி மற்றும் ஆட்களைத் திரட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பிய அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

 

சாதிக் பாட்ஷா 2018 ஆம் ஆண்டு சென்னை மண்ணடியில் மன்னார் இப்ராகிம் தெருவில் மதப்பிரச்சார மையம் சார்பில் தற்காப்பு கலை பயிற்சி மையம் நடத்தியதோடு அங்கு வரும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ்.ஐ அமைப்பில் சேர்த்ததும், கைதாகி ஜாமீனில் வந்து சதித்திட்டம் தீட்டியதும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கைதானவர்களுக்கு தொடர்புடைய 9 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் தாக்குதல் நடத்துவதற்காக சதி திட்டம் தீட்டியதற்கான வரைபடங்கள், ஆவணங்களை என்.ஐ.ஏ கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்