புதுச்சேரியை அடுத்த மதகடிப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சிவா(32) என்பவர் அப்பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் சென்னை திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமிக்கும்(22) கடந்த 18.4.2019 அன்று திருமணம் நடைபெற்றது. தற்போது விஜயலட்சுமி 4 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்து இன்று காலை திடீரெனெ புகை வந்ததால் அருகில் வசித்து வருபவர்கள் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் கட்டி பிடித்த நிலையில் பிணமாக கிடந்தனர். மேலும் எரிவாயு சிலிண்டர் டியூப் திறக்கப்பட்டு, வீடு முழுவதும் எரிவாயு பரவி இருந்தது. அதையடுத்து தீயணைப்பு வீரர்கள், வீடு முழுவதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து இரண்டு உடல்களையும் மீட்டனர். வீட்டில் இருந்த கட்டில் முழுவதும் எரிந்து, கணவன்-மனைவி இருவருக்கும் லேசான காயத்துடனும் விஜயலட்சுமி கழுத்தில் பெரிய துப்பட்டா ஒன்று கழுத்தை சுற்றியும் இருந்தது.
இந்த சம்பவம் குறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் விஜயலட்சுமி தூக்கில் தொங்கி இருக்கலாம் எனவும், அதனை பார்த்த சிவா மனைவியின் உடலை கீழே இறக்கி கியாஸசை திறந்து விட்டு தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் திருமணமாகி 6 மாதத்தில் கணவன், 4 மாத கர்ப்பினி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
