Published on 27/05/2021 | Edited on 27/05/2021

திருச்சி சிறப்பு காவல் படையில் பணியாற்றிவந்தவா் ராஜேஸ்வரி(33). இவர் கடந்த 20ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு கரோனா இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு சளி மற்றும் இருமல் குறையாமல் இருந்ததால், சி.டி.ஸ்கேன் மூலம் பார்த்ததில் அவருடைய நுரையீரலில் அதிகளவில் சளி இருப்பது கண்டறியப்பட்டு, அவர் அரசு மருத்துவமனையில் அசிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் அவருடைய கணவரான முருகன், தன்னுடைய சொந்த விருப்பத்தின்படி தன் சொந்த ஊரான மதுரையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்ற நிலையில், போகும் வழியில் ராஜேஸ்வரிக்கு ஆக்சிஜன் அளவு குறைய ஆரம்பித்து மதுரைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.