Published on 01/10/2018 | Edited on 01/10/2018
சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர் எச்.ராஜா நீதிமன்றத்தையும், காவல்துறையையும் அவதூறாக பேசியது தொடர்பான கேள்விக்கு,
எச்.ராஜா பேசிய வீடியோ வெளிநாட்டிற்கு சென்று லேட்டஸ்ட் டெக்னாலஜி மூலம் மாற்றப்பட்டு திரும்பி வந்துள்ளது என்கிறார்கள். ஆகவே அதை கண்டுபிடிக்கக் கூடிய பொறுப்பு போலீசாருக்கு இருக்கிறது. ஆகவே எச்.ராஜா கேஸை எச்.ராஜாவே டீல் பண்ணுவார். என்மீது போடப்பட்ட வழக்கை நான் படீல் பண்ணுகிறேன். நான் வாய்த்தவறியோ, தெரியாமலோ செய்த ஒரு சிறிய தவறிற்காக தமிழ்நாட்டிலேயே செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டவன் நான் ஒருவன் மட்டும்தான். மற்றவர்கள் எல்லாரும் வருத்தம்தான் தெரிவிக்கிறார்கள் எனக்கூறினார்.