Skip to main content

கோடிக்கணக்கில் பேரம் பேசும் ஆளும் கட்சியினர் - நாஞ்சில் சம்பத் பேட்டி

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
Interview



தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார் நாஞ்சில் சம்பத்.
 

அப்போது அவர், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று தினகரன் நம்புகிறார். அவரது நம்பிக்கைக்கு எனது வாழ்த்துக்கள். 18 எம்எல்ஏக்களையும் தற்காத்துக்கொள்ளும் கடமை தினகரனுக்கு உள்ளது.
 

ஏனெனில் அவர்களில் 7 பேர் தங்களுக்கு ஆதரவு அளிக்க இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். கோடிக்கணக்கில் பேரம் பேசும் செயல்களை செய்வதற்கு ஆளுங்கட்சியினர் தயங்க மாட்டார்கள். 
 

இதனால் தினகரன் தனது பக்கம் உள்ள எம்எல்ஏக்களை தக்க வைத்துள்ளாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது தவறு இல்லை. இந்த முயற்சியில் தினகரன் வெற்றி பெறுவார்.
 

தமிழக முதல் அமைச்சர் தொடர்பான குற்றச்சாட்டுக்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட் கூறியவுடனேயே முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். இவ்வாறு கூறினார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்