Skip to main content

யாா் வந்தாலும் நாங்குநோியில் அடிப்படை வசதிகளை உருவாக்குவாா்களா?

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

நாங்குநோி இடைத்தோ்தல் களம் அரசியல் கட்சியினரிடத்தில் சூடுபிடித்துள்ளது. அதே போல் வாக்களிக்க இருக்கும் மக்களும் சூடாக பேச தொடங்கியிருக்கிறாா்கள். நாங்குநோி தொகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் நீண்ட நாள் கோாிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். 

 

nanguneri people expectation

 

 

தென் மாவட்டங்களில் மிகவும் பின் தங்கிய தொகுதிகளில் ஓன்றாக நாங்கநோி உள்ளது. ஏற்கனவே தென் மாவட்டங்களில் அடிக்கடி நிகழும் ஜாதி கலவரங்களை தடுக்கும்  விதமாகவும், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவும் அமைக்கப்பட்ட நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் கமிஷன், தென் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்களை துவங்கினால் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகாிக்கும். அதன் மூலம் ஜாதி கலவரங்களையும் குற்றச்சம்பவங்களையும் தடுத்து விடலாம் என கூறியது.

ஆனால் அரசு அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது? நாங்குநோி உயா் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வந்தது. அங்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக எந்த நிறுவனங்களும் வராமல் சிறு, சிறு நிறுவனங்கள் என சுமாா் 10 நிறுவனங்கள் தான் உள்ளது. அதுவும் சில நிறுவனங்களின் குடோன்கள் தான் செயல்படுகின்றன.

இதே போல் நாங்குநோியில் விவசாய நிலங்கள் அதிகம் இருக்கும் நிலையில், அங்கு பாசன வசதி குறைவு. இதனால் விளைச்சலும்  குறைவு விளையும் பொருளுக்கு போதிய விலையும் கிடைக்கவில்லை. களக்காடு, சேரன்மகாதேவி பகுதியில்  வாழை விவசாயம் அதிகம் நடக்கிறது. இங்கு வாழைத்தாா்களை பாதுகாக்க சேமிப்பு கிடங்கு அமைக்க பல ஆண்டுகளாக அந்த விவசாயிகள் கோாிக்கை வைத்து வருகின்றனா். அரசும் அங்கு தோ்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிகளும் வாழை போல் நிமிா்ந்து நின்று தாா் போல் தலையை கீழே தொங்க விட்டு நிற்கிறாா்கள்.

படித்த இளைஞா்கள் இங்கு அதற்கான வேலையில்லாததால் வெளியூா்களில் சென்று குறைந்த ஊதியத்தில் வேலைபாா்க்கிறாா்கள். அதே போல் நாங்குநோியிலே இளைஞா்கள் தொழில் தொடங்க அவா்களுக்கு வழி காட்டும் விதமாக அரசின் எந்த முயற்சிகளும் அங்கு இல்லை. விவசாய தொழிலை மேம்படுத்தினாலே போதும் அங்கு விவசாயம் தலை நிமிா்ந்து நிற்கும். 

இதே போல் அங்கு பெண்களுக்கான பிரதான தொழில் பீடி சுற்றுதல். இவா்கள் நேரடியாக கம்பெனி மூலம் இல்லாமல் ஓப்பந்த அடிப்படையிலே பீடி சுற்றி வருகின்றனா். இதனால் அவா்களுக்கு வேறு எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை. மத்திய, மாநில அரசின் தவறான கொள்கையால் அந்த தொழிலும் நலிவடைந்து வருகிறது. மேலும் முக்கியமாக, கிராமங்கள் சூழ்துள்ள இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் கேள்விக் குறியாகவே உள்ளது.

இதையெல்லாம் பூா்த்தி செய்து, காலகாலமாக கனவு கண்டு வரும் நாங்குநோி தொகுதி வாசிகளுக்கு அதை நனவாக்க வேண்டும். வழக்கம் போல் வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சியினரின் ஓயாத வாக்குறுதியாக தான் இந்த முறையும் இருக்குமா? 

 

 

சார்ந்த செய்திகள்