Published on 25/07/2019 | Edited on 25/07/2019
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் இருந்த நளினி இன்று பரோலில் வெளியே வந்துள்ளார். மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக அவர் ஒரு மாத பரோலில் வந்துள்ளார்.

பரோலில் வந்துள்ள நளினி வேலூர் சத்துவாச்சாரியாரில் புலவர்நகரில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில துணை பொது செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்குகிறார்.