Skip to main content

நளினியின் பரோல் நீட்டிப்பு! தமிழக அரசு மறுத்த நிலையில் ஐகோர்ட் அனுமதி!

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

 

நளினி முருகனுக்கு பரோலை நீட்டிக்க தமிழக அரசு மறுத்துவிட்ட நிலையில்,  3 வாரங்கள் பரோலை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

n

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினிமுருகன், தனது மகள் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்வதற்காக  6 மாதங்கள் பரோல் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இதையடுத்து நிபந்தனைகளுடன் ஒரு மாதம் மட்டும் பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டது.  அதன்படி, 30 நாட்கள் பரோலில் கடந்த மாதம் 25ஆம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார். 

 

இவர் தற்போது வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்கியுள்ளார்.    இந்த சூழலில் மகளின் திருமண ஏற்பாடுகளை 30 நாட்களுக்குள் முடிக்க முடியவில்லை என்று கூறி, பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க தமிழக அரசு, சிறைத்துறையிடம் கோரியிருந்தார். அவரது  கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். 

 


மகளின் திருமண ஏற்பாடுகள் இன்னும் நிறைவடையாததால்  பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி நளினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஏற்கனவே பரோல் முடியும் நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி அரசுக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி கோரிக்கை மனு அளித்ததாவும் ஆனால் அந்த மனுவை ஆகஸ்ட்13ல் நிராகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மகள் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க சிறை நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

 

மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல் குமார் அமர்வு, இன்று பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தனர்.  அதன்படி இன்றைய விசாரணையை அடுத்து, நளினிக்கு மேலும் 3 வாரம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்