![music Teacher arrested under POCSO Act for misbehaving with girl](http://image.nakkheeran.in/cdn/farfuture/Tc0dOGDbxKTZn-PPRiZJ74mDJciAUZ5skvctm9Ui8Nk/1715146598/sites/default/files/inline-images/Untitled-13_38.jpg)
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், சிறுமிக்கு இசை கற்றுக் கொள்வதில் ஆர்வம் ஏற்பட அவரது பெற்றோர்கள் அருவங்காட்டில் உள்ள இசைப் பயிற்சி பள்ளி ஒன்றில் சிறுமியை சேர்த்துள்ளனர். கடந்த ஆண்டு முதல் சிறுமி இசை பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் அங்கு இசை ஆசிரியராக பணியாற்றி வரும் பிரசாந்த் செபஸ்டின் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து சிறுமியை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி சிறுமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரது பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த குன்னூர் மகளிர் போலீசுக்கு தெரிய வர உடனடியாக, விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இசை ஆசிரியர் செபஸ்டினை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.