Published on 04/09/2019 | Edited on 04/09/2019
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகரான முருகானந்தம் தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராக நியமிக்கப்படயிருப்பதாக கூறப்படுகிறது.
![tamilnadu bjp](http://image.nakkheeran.in/cdn/farfuture/bixtMq0BcfwHBX3a6s9grL4vZKKbWdaDapDV1vpWA48/1567611442/sites/default/files/inline-images/z15_18.jpg)
இவர் பாஜகவின் போராட்டக் குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், தேசிய இளைஞரணி துணைச் செயலாளராகவும் இருக்கிறார். இவர் தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராக நியமிக்கப்படுவதற்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வெள்ளிக்கிழமை இதுதொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-மகேஷ்