
கடந்த விநாயகர் சதுர்த்தியன்று தி.மு.க இளைஞரணிச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சிலை ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இது விவாதப் பொருளானதையடுத்து தற்போது அவர் விளக்கமளித்துள்ளார்.
என் அம்மா வாங்கிய சிலையுடன் என் மகன் விருப்பத்தின் பேரில் புகைப்படம் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தேன். மேலும் அந்தச் சிலை எனது தாயார் வைத்து வழிபட்ட சிலை. என் தாயாருக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. ஆனால் எனக்கோ, என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும்நாட்டில் பல பிரச்சனை இருக்கையில் இதில் கயிறு திரிக்க பார்ப்பது சந்தர்ப்பவாதிகளின்சதிவேலைஎனவும் அவர் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)