
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும் கும்மரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், தெற்குவீரபாண்டியபுரம் பகுதி கிராமமக்களை திமுகவின் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல், தூத்துக்குடி தெற்குமாவட்ட செயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட தி.மு.க.வினர் கடந்த 04.04.2018ம் தேதி அன்று நேரில் சென்று சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து பேசினர்.
இந்நிலையில், தெற்குவீரபாண்டியபுரம் கிராம நிர்வாக அலுவலர் மாரிக்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் ''சட்டவிரோதமாக கூடி பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்ததுடன், கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதாகவும்'' கூறி திமுகவின் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் மீது 7பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.
மாவட்ட நிர்வாகத்தின் தூண்டுதலின்பேரில் போலீசாரால் தொடரப்பட்ட இந்த பொய்வழக்கில் முன்ஜாமீன் கேட்டு திமுக மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை இன்று(10.04.2018) விசாரித்த மாண்புமிகு., நீதியரசர் சாமிநாதன் அவர்கள் இந்த வழக்கில் திமுக மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயலுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.