Skip to main content

மலைகள் தினம் - பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்றிய மாணவர்கள்

Published on 11/12/2017 | Edited on 11/12/2017
மலைகள் தினம் - பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்றிய மாணவர்கள்

சர்வதேச மலைகள் தினத்தை ஒட்டி ராமகிருஷணா கலை அறிவியல் கல்லூரியின் சார்பாக மாங்கரை முதல் ஆனைகட்டி வரை பிளாஸ்டிக் கழிவு பொருட்களை மாணவர்கள் அகற்றினர்.

இன்று சர்வதேச மலைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ‘மலைகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகளவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, உலகில் உள்ள மிகவும் பழமையான மலைகளின் உயரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையிலுள்ள பல மலைகளுக்கும் பொருந்தும். இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கும், அரியவகை மூலிகைகளை பாதுகாப்பதற்காகவும், சுத்தமான காற்றை பெறுவதற்காகவும் மலைகளின் உதவி முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தினம் கடைப்பிடிக்கப்படுவதின் முக்கிய நோக்கம், மக்களிடையே மலைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே.  ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் நாட்டு நலப்பணித்திட்டத்தில் மூலம் மாங்கரையிலிருந்து ஆனைகட்டி வரையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அருள்

சார்ந்த செய்திகள்