Skip to main content

மோடி சென்னை வருகை! - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது!

Published on 11/04/2018 | Edited on 11/04/2018
nam


பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்த எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் முன்னெச்சரிக்கையாக அனைவரையும் கைது செய்ய காவல்துறை தயாராகி வருவதாக தகவல் வெளியானது, அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அருகே திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி நாளை முறைப்படி தொடங்கிவைக்க உள்ளார். பின்னர் அடையார் புற்றுநோய் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். இதையொட்டி சென்னையில் ஐந்தாயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த பாதுகாப்பு பணியில் கமாண்டோ படையினர் மற்றும் அதிரடி படையினரும் ஆகியோரும் ஈடுபட உள்ளனர்.

மேலும் விமான நிலையம் முதல் ஐஐடி, அடையார் புற்றுநோய் மையம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற ஆலந்தூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் காலக்கெடு முடிந்த நிலையில் மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்காதது குறித்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஐபிஎல்லுக்கு எதிராக நேற்று சென்னையில் கடும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நாளை சென்னை வந்து மஹாபலிபுரம் சென்று மீண்டும் கிண்டி ஐஐடிக்கு வந்து டெல்லி செல்லும் பிரதமருக்கு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி காட்டப்படும் வாய்ப்பு உள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுல், வர்த்தக பிரிவு தலைவர் ஜீவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்