Published on 23/10/2018 | Edited on 23/10/2018

தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு விரைவில் வரவுள்ள நிலையில் அணி தாவலாம் என்ற கருத்து நிலவியதால், அவர்களை பாதுகாக்கும் பொருட்டு நேற்று இரவு முதல் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குற்றாலத்தில் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலையில் அவர்கள் பழைய குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி அருகே உள்ள ரிசார்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ரிசார்ட்டில் தற்போது தங்க. தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, ரெங்கசாமி, சுப்பிரமணியன், கதிர்காமு, முத்தையா, பிரபு, சுந்தர்ராஜ், பழனியப்பன், மாரியப்பன் கென்னடி, பாலசுப்பிரமணியன் ஆகிய 11 பேர் தங்கி உள்ளனர்.