![Ministers pay homage to Thiruvalluvar statue](http://image.nakkheeran.in/cdn/farfuture/yXhDNFNneBwtInmUqduty6QisW1cfT5gHRb1YFmOsrw/1610690735/sites/default/files/2021-01/today-5.jpg)
![Ministers pay homage to Thiruvalluvar statue](http://image.nakkheeran.in/cdn/farfuture/LkKH87qLB4Eu3qoytVXgBgbWUStlc6BuDyG1aAEczDA/1610690735/sites/default/files/2021-01/today4.jpg)
![Ministers pay homage to Thiruvalluvar statue](http://image.nakkheeran.in/cdn/farfuture/8h5iTW5EJjXveHjFOS83kXtcjTRqJFfj_1MHhJ_jFxk/1610690735/sites/default/files/2021-01/today1.jpg)
![Ministers pay homage to Thiruvalluvar statue](http://image.nakkheeran.in/cdn/farfuture/5EZEq5lT3v6iV37H7sj2ZRWnfD1-AXHMZ9q290fSXTs/1610690764/sites/default/files/2021-01/today2.jpg)
Published on 15/01/2021 | Edited on 15/01/2021
உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை போற்றும் விதமாக தை மாதம் இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசின் சார்பாக இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவரின் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.