தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி, திமுக தலைமையகமான அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த ஸ்டாலின், உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசை விமர்சித்துப் பேசியது தொடர்பாக செப்டம்பர் 4-ஆம் தேதி, முரசொலி மற்றும் தினகரன் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் நகர குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக அரசுக்கும், அமைச்சருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாகப் பேசிய ஸ்டாலினை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.