Skip to main content

மாநகர போக்குவரத்து பணிமனையை ஆய்வு செய்த அமைச்சர் (படங்கள்) 

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

வடக்கிழக்கு பருவ மழை காரணமாக தமிழ்நாடு முழுக்கப் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மழையால் பாதிப்படைந்த சென்னை மந்தைவெளியில் உள்ள மாநகரப் போக்குவரத்து பணிமனையைப் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்குகள் ரத்து!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Cases against Minister Rajakannappan canceled

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாகவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடரப்பட்டது. இதனை எதிர்த்து அமைச்சர் ராஜகண்ணப்பன் இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் வாதிடுகையில், “இந்த வழக்கில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு தொடர்பில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனவே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்” வாதிடப்பட்டது. இந்நிலையில் இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். 

Next Story

“பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம்” - அமைச்சர் ராஜகண்ணப்பன்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 Minister Rajakannappan said Only people from Tamilnadu are important in universities

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று (05-02-24) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பல்கலைக்கழகங்களில் ஏற்படும் நிதிப்பற்றாக்குறை என்பது நாடு முழுவதும் இருக்கிறது. இருப்பினும், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் நிதிப் பற்றாக்குறை கூடிய விரைவில் சரி செய்யப்படும். சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. துணை வேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக ஆளுநர், முதல்வருடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். 

அரசு என்பது மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் நியமிக்கப்பட்டவர். அவரைக் குறைகூற விரும்பவில்லை. ஆளுநருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆளுநரைப் பொறுத்தவரை அரசியல் ரீதியான கருத்துகளை தவிர, நிர்வாக ரீதியான கருத்துகளை கூறினால் அதை ஏற்க நாங்கள் தயாராக உள்ளோம்.  

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 25 பொறியியல் கல்லூரிகள் மிகவும் மோசமாக இருப்பதால் அதை மூடக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. அவற்றை மூட வேண்டுமா? வேண்டாமா என்பதை பல்கலைக்கழக சிண்டிகேட் குழு முடிவு எடுக்கும். தேசிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்கள் இருந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படும்.

மாநில கல்விக்கொள்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பிட்ட பின், முதல்வர் தலைமையில் இரண்டும் ஒப்பிடப்பட்டு முடிவெடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆளுநர் பரிந்துரைத்தாலும் அரசின் முடிவே இறுதியானது” என்று கூறினார்.