மெட்ரோ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் சிரிஷ் சரவணன். இவர் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் ஆவார். தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் நிலையில் அந்தப் படத்தினுடைய தயாரிப்பாளருக்கு கோரிக்கை ஒன்றை வைத்து டுவிட்டர் பதிவு ஒன்றை போட்டுள்ளார் சிரிஷ் சரவணன்.

அதில், வரும் எட்டாம் தேதி அதாவது, நாளை நடிகர் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதனால் தனக்கு தல காய்ச்சல் கடுமையாக இருக்கிறது. எனவே அந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு எனக்கு ஒருநாள் விடுமுறை வேண்டும் என கேட்டுள்ளார். தற்போது இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலை ஏற்படுத்தியுள்ளது.
Hi producer saar’s @thisisysr @irfanmalik83 @YSRfilms . As i am suffering from #Thala fever i request you to grant me leave on 8th aug 2019 ? ?? #NerKondaPaarvai #excited #thalafan #HVinoth @DoneChannel1 pic.twitter.com/czr6Y5veQA
— Metro Shirish (@actor_shirish) August 6, 2019