Skip to main content

மேல்மருவத்தூர் கோவிலில் ஆய்வு நடத்த உத்தரவிட்ட அதிகாரி இடமாற்றம்

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

 

மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளார் நடத்தும் ஆதிபராசக்தி கோயில் தென்னிந்தியாவில் புகழ்பெற்றது. அந்த கோயிலில் இந்த வாரம் தொடக்கத்தில் வருடாந்திர ஆய்வு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வேலூர் மண்டல அதிகாரிகள் நடத்தினர்.

 

m

 

அங்கு எப்படி ஆய்வு நடத்தலாம் என இந்து அமைப்புகள் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தன. இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆய்வு நடத்த உத்தரவிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 

 

இந்நிலையில் அறநிலையத்துறையின் உயர் அதிகாரிகளின் அனுமதியில்லாமல் மேல்மருவத்தூரில் ஆய்வு நடத்தியது ஏன் என வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபாலிடம் கேள்வி எழுப்பினர்.   அவர் இது வழக்கமான நடைமுறை தான் எனச்சொன்ன விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் அறநிலையத்துறையின் வேலூர் மண்டல இணை ஆணையர் தனபால் சிவகங்கைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்