வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. வேகமாக நகரும் இப்புயல் நாளை இரவு மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் பொழுது 65 முதல் 75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளிக்காற்று 85 கிமீ வரை வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நாளை (9/12/22) 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு இருந்தனர்.
தற்போது நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, தர்மபுரி, நாகப்பட்டிணம், திருச்சி, திருப்பத்தூர், சிவகங்கை என 23 மாவட்டங்களிலும் அன்று (9/12/22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து புதுச்சேரி காரைக்காலிலும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.