Skip to main content

திருமணத்தை மீறிய உறவு;  அடுத்தடுத்து கைவரிசை - வசமாக சிக்கிய ஜோடி

Published on 22/01/2023 | Edited on 22/01/2023

 

man and woman were arrested Kanyakumari after series thefts

 

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கோவில், வீடுகள், நிறுவனங்களில் திருட்டு மற்றும் சாலைகளில் நடந்து செல்வோர்களிடம் நகை பறித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையொட்டி தனிப்படை போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

 

அருமனை செம்மங்காலை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டினா தனது பெட்டிக்கடையில் வியாபாரம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் பைக்கில் கணவன் மனைவி போல் வந்த இருவர், பழம் வாங்குவது போல் நடித்து கிறிஸ்டினா கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். அதே போல் தக்கலை பஸ் நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரின் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை மோட்டார் பைக்கில் வந்த ஒரு ஆணும் பெண்ணும் பறித்துச் சென்றனர். மேலும் மார்த்தாண்டத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை மோட்டார் பைக்கில் வந்த ஜோடி  பறித்துச் சென்றனர்.

 

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மோட்டார் பைக் ஜோடி பற்றிய செய்திகள் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பனச்சமூடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மோட்டார் பைக்கில் வந்த ஜோடி ஒன்று போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்டு வரும் மோட்டார் பைக் ஜோடி இதுவாகத்தான் இருக்குமோ என்ற சந்தேகத்தில் விசாரித்தபோது இவர்கள்தான் என்று தெரியவந்தது.

 

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் கூறும்போது, கேரளா மாநிலம் பள்ளிச்சல் பகுதியைச் சேர்ந்த சதீஷ்க்கு (34) திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் திருவனந்தபுரத்தில் ஓட்டலில் வேலை செய்து வந்தார். அந்த ஓட்டலின் எதிரே துணிக் கடை ஒன்றில் வேலை செய்து வந்த வெள்ளறட பகுதியைச் சேர்ந்த சாந்தகுமாரி (40). அவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளன.

 

ஒரே இடத்தில் சதீசும் சாந்தகுமாரியும் வேலைப் பார்த்து வந்ததால் இருவருக்குமிடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனிடையே ஆடம்பர செலவுக்காக இருவரும் திருட்டு, நகைப் பறிப்பு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். மேலும் குமரி மாவட்டத்தில் நடந்த 3 வழிப்பறி சம்பவங்கள் போன்று கேரளாவிலும் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சீர்காழியில் கரையொதுங்கிய மர்மப்பொருள் வெடிக்க வைத்து அழிப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Detonation of mysterious object washed ashore in Sirkhazi

சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதனை பாதுகாப்புடன் வெடிக்கவைத்து அழிக்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நாயக்கர்குப்பம் மீனவ கிராமப் பகுதியில் கடந்த 12 ஆம் தேதி 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில மொழியில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று கரை ஒதுங்கியது. பார்ப்பதற்கு கேஸ் சிலிண்டர் போன்ற அமைப்பில் இருக்கும் அந்த மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது தொடர்பாக அந்தப் பகுதி மீனவர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். சுமார் ஒன்றரை அடி நீளமும் 6 அங்குலம் விட்டமும் கொண்ட அந்த உருளை குறித்து விசாரணை செய்யப்பட்டதில், ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்ஞைகளை வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் இது என்பது எனத் தெரியவந்தது. இருப்பினும் அந்தப் பொருளை யாரும் தொட வேண்டாம் என தடுப்பு அமைத்து சென்றனர் போலீசார்.

Detonation of mysterious object washed ashore in Sirkhazi

இந்நிலையில் நீர்மூழ்கி கப்பலில் பயன்படுத்தப்படும் அந்த கருவியானது வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் பாதுகாப்பாக வெடித்து அழிக்கப்பட்டது. இதற்காக பெரிய அளவில் குழி தோண்டப்பட்டு அதனுள் அந்த கருவியை வைத்து வெடிக்க வைக்கப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பிற்காக போலீசாரும் இருந்தனர்.

Next Story

இரவில் நடப்பது என்ன? பாண்டிச்சேரி டூ திண்டிவனம் சாலையில் பரபரப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Late night thefts on Pondicherry to Tindivanam road

பாண்டிச்சேரி வார இறுதி நாட்களில் எந்த அளவுக்கு பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே. அதே அளவுக்கு முக்கியமானது பாண்டிச்சேரி டூ திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். சென்னை செல்லும் வாகனங்களும், பெங்களூரூ திருவண்ணாமலை, செஞ்சி போன்ற நகரங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த சாலையை தான் பிரதானமாக பயன்படுத்துகின்றன. எப்பொழுதும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.

இந்த சாலையில் பாண்டிச்சேரி நுழைவாயிலில் இந்தியாவின் பிரபலமான ஜிப்மர் மருத்துவமனை உள்ளது, இந்த மருத்துவமனைக்கு திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து நோயாளிகள் வருகின்றனர். அதில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த சாலையை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். 

இந்த சாலையில் தான் இப்பொழுது திட்டமிட்டு இரவு நேரங்களில் குறிப்பாக விடியற்காலை நேரத்தில் வாகனங்களை மறித்து கொள்ளை நடப்பதாக நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் தங்களது அனுபவங்களை, சக வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை பதிவாக சமூக ஊடங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் முறையிட்ட போது அவர்கள் நாங்கள் கவனிக்கிறோம் என சொல்கிறார்களே தவிர அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்கிறார்கள. தேசிய நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், அவசர தொடர்புக்கு சுங்கச்சாவடியை தொடர்புகொள்ளும் வசதியை உருவாக்கி வைக்கவேண்டும் என்கிற  நெடுஞ்சாலைத்துறை விதி, சாலையைப் பாதுகாப்பது கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளின் பொறுப்பு எனக்கூறுகிறது. ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை, சாலையை மட்டும் தான் பராமரிப்போம் என்கிறார்கள்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அது 2021 ஆம் ஆண்டு வெளியான பழைய ஆடியோ இப்போது அப்படியல்ல, அங்கு இரவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்கிற தகவல் பரப்பப்படுகிறது.