Published on 29/11/2019 | Edited on 29/11/2019
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மூன்று வருடங்களாக நடைபெறாத நிலையில், தேர்தல் நடக்காமல் போனதற்கு திமுகதான் காரணம் என அதிமுக தரப்பும், அதிமுகத்தான் காரணம் என திமுக தரப்பும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் காலம் கடத்தப்படுவது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி கருத்து தெரிவித்துள்ளது,

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் அதிமுக, திமுக கண்ணாமூச்சி விளையாடுகிறது. ஆளும் கட்சியும், ஆள்வதற்கு ஆளாய் பறக்கும் கட்சியும் சுயநலத்திற்காக தேர்தல் நடக்காமல் பார்த்துக்கொள்கிறது. மூன்றாண்டாக புலி வருது புலி வருது என்பதுபோல் அரசு தேர்தல் நடத்த போவதாக அறிவிக்கிறது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் குறை இருப்பதாக எதிர்க்கட்சி நீதிமன்றம் போவதுமாக கண்ணாமூச்சி நடக்கிறது எனக்கூறியுள்ளது ம.நீ.ம.