Skip to main content

இறந்த  உடலை மாற்றிக் கொடுத்த மருத்துவமனை!

Published on 16/06/2018 | Edited on 16/06/2018
maan

 

புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது மஹாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் கடலூர், விருத்தாசலம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

இந்நிலையில் கடந்த மாதம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள இருப்புக்குறிச்சி பகுதியை சார்ந்த புஷபராஜ் என்கிற 65 வயது முதியவருக்கு உடல் நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு பின்பு அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு இறந்து விட்டார்.


 இதேபோன்று கடலூர் முதுநகர் பகுதியை சார்ந்தவர் பூபாலன். வயது 65. இவர் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.  இதனை தொடர்ந்து இன்று காலை பூபாலன் உடலை பெற்றுக்கொண்டு அவரது உறவினர்கள் கடலூர் சென்றுள்ளனர். அதே நேரம் புஸ்பராஜ் உடலை வாங்க விருத்தாசலத்திலிருந்து உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். உடலை பெற்று பார்த்தபோது அது புஸ்பராஜின் உடல் இல்லை என்று தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

 

 அதையடுத்து நிர்வாகத்தின் சார்பில் கடலூருக்கு கொண்டு செல்லப்பட்ட புஷ்பராஜின் உடலை திருப்பி கொண்டு வர சொல்லி இருவரிடமும் உடல்களை ஒப்படைத்தனர். இதில் விருத்தாசலம் புஷ்பராஜின் உறவினர்கள் மருத்துவமனை அலட்சியமாக செயல்பட்டதால் தான் அவர் இறந்தார் என்றும், இதற்கு பதிலளிக்கவேண்டும் என்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலந்து போக செய்தனர். மருத்துவமனை அலட்சியத்தில் இரு உடல்களை மாற்றி அனுப்பியதில் பின்பு காவல்துறை தலையிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

சார்ந்த செய்திகள்