Skip to main content

ஒக்கி புயலில் மாயமான மீனவர்களை மீட்ககோரி நாகையில் மீனவர்கள் பேரணி

Published on 11/12/2017 | Edited on 11/12/2017
ஒக்கி புயலில் மாயமான மீனவர்களை மீட்ககோரி நாகையில் மீனவர்கள் பேரணி



ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்டுத்தரவேண்டும் என நாகை மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 30ம் தேதி கன்னியாக்குமரியை புரிட்டிப்போட்டது ஒக்கி புயல். அந்த கோர சம்பவத்தில் அப்பாவி மக்கள் பாதித்ததோடு, கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் கரை திரும்பவில்லை. அதில் நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரும் வீடு திரும்பாமல் மாயமாகினர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நாகை நம்பியார் நகரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்குள்ள சமுதாய கூடத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறகு இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். நாளை (இன்று) நாகை- காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சங்கம் சார்பில் கருப்பு கொடி ஏந்தி பேரணி நடைபெறும் என்று அறிவித்தனர். இந்த அறிவிப்பு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர், மற்றும், அமைச்சரின் காதுக்கு எட்டியதும் பதரியடித்துக் கொண்டு மீனவர்களிடம்  பேச்சு நடத்த மீன்வளத் துறை உதவி இயக்குனர் கங்காதரன் வந்தார். அவரை போராட்டத்தில் இருந்த மீனவ பெண்களும், ஆண்களும் முற்றுகையிட்டனர். போலீசார் வந்து உதவி இயக்குனரை மீட்டனர்.

பிறகு நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி மீனவர்களிடம் பேச்சு நடத்தினார். அவரிடம் மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தாருங்கள்’ என்று பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துவிட்டு வெளியில் வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து மத்திய பேரிடர் மீட்புகுழுவோடு திறமையான மீனவர்களையும் மீட்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றார்.

பிறகு மீனவர்களை சந்திக்க வந்த அமைச்சர் மணியனிடம், மீட்பு குழுவினர், கடலில் 50 நட்டிக் கல் தூரம் வரையே தேடுகின்றனர். ஆனால், மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க போய் புயலில் சிக்கியிருக்கலாம். அதனால், 250 நாட் டிக்கல் தூரம் வரை சென்று தேட வேண்டும்" என கோரிக்கை வைத்தனர்.

அமைச்சரோ, நான்  உடனே அரசிடம் கூறுகிறேன் என கிளம்பினார்.

இந்த நிலையில், நேற்று 9 ம் தேதி முடிவெடுத்தது போலவே மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பேரணி வர முடிவெடுத்தனர். இன்று காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 1000த்திற்கும் அதிகமான மீனவர்கள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திரண்டு வந்தனர். அவர்களை போலிசார் இடையில் தடுத்து நிறுத்த முயன்றனர். அவர்களால் முடியாமல் போக ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போலிஸ் தடுப்பு அமைத்து போலிசார் குவிக்கப்பட்டு மீனவர்களை தடுத்து நிறுத்தினர்.

அங்கேயே முற்றுகையிட்ட படி தமிழக அரசின் அலட்சிய போக்கை கண்டித்து கோஷம் போட்டனர். பிறகு, மீனவர் தலைவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

க.செல்வகுமார் 

சார்ந்த செய்திகள்