Skip to main content

நன்றி தெரிவித்த மாணவி; நெகிழ வைத்த ஆட்சியர்

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

madurai school student wrote letter to virudhunagar collector

 

மக்களிடமும் மாணவர்களிடமும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ஒவ்வொரு ஆண்டும் மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நவம்பர் 17 முதல் 27 ஆம் தேதி வரை முதலாமாண்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பாளர்கள் என ஏராளமானோர் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

 

இந்நிலையில், மதுரை மாவட்டம் சின்னாரெட்டிபட்டியில் உள்ள ஆரம்பப்பள்ளி ஒன்றில் படிக்கும் 4 ஆம் வகுப்பு மாணவி கு.காவியதர்ஷினி, விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு, "விருதுநகர் முதல் புத்தகத் திருவிழாவில் மகத்தான வெற்றி சாதனை படைத்த உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் தங்களோடு பணியாற்றிய அனைவருக்கும் எங்களுடைய அன்பான வாழ்த்துகள்" எனக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

 

இந்தக் கடிதத்திற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியும், "முதலாவது விருதுநகர் புத்தகத் திருவிழா குறித்த தங்களது வாழ்த்து மடல் கிடைக்கப்பெற்றது மிக்க மகிழ்ச்சி. மாணவச் செல்வங்களாகிய நீங்கள் உங்களுக்கான லட்சியம் ஒன்றை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். அதை அடைய முயற்சிக்கும்போது வரும் தடைகளை விடாமுயற்சியுடன் எதிர்கொண்டு இலட்சியத்தை அடைந்து வாழ்வில் வெற்றிபெற்று சந்தோஷமாக இருங்கள். அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்" எனத் தெரிவித்து பதில் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே மாணவர் ஒருவர் மழையின்போது பள்ளிக்கு விடுமுறை கேட்டதற்கு, திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் "பாலே இங்க தேறல.. பாயாசம் கேட்குதா.." என்று பதிலளித்து இருந்தார். இதேபோன்று  மற்றொரு மாணவரின் கேள்விக்கு, நாளை பள்ளிக்குச் செல்ல சைக்கிளை தயாராக வைத்திருங்கள் என்று பதிவிட்டு இருந்தது வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.