Published on 18/07/2020 | Edited on 18/07/2020
![madurai district coronavirus peoples](http://image.nakkheeran.in/cdn/farfuture/2XlB6-ovSBacsA7odO6CPZOg4GORns7zJTfBcvMfVew/1595043347/sites/default/files/inline-images/coronavirus%2045896_0.jpg)
மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டியது.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வரும் நிலையில், மதுரை, நெல்லை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் கரோனா தடுப்புப் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இன்று (18/07/2020) காலை நிலவரப்படி, மதுரை மாவட்டத்தில் மேலும் 245 பேருக்கு கரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 8,103 ஆக உயர்ந்துள்ளது. இதில் 138 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4,677 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.