Published on 28/11/2019 | Edited on 28/11/2019
மூன்று வருடங்களாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருக்கும் சூழலில் உள்ளாட்சி தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவிருக்கின்ற நிலையில் அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோயம்பேட்டில் உள்ள மாநில தலைமை தேர்தல் ஆணைய அலுவகலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கி இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் நடந்துவரும் ஆலோசனை கூட்டத்தில் அங்கிகரிக்கப்பட்ட கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் எத்தனை கட்டங்களாக நடத்தலாம், தேதிகள் அறிவிப்பு பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.