Published on 10/05/2024 | Edited on 10/05/2024
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மேல் பொதட்டூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முரளி. இவரது மகள் குமாரி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக குமாரி காத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்விதுறை வெளியிட்டது. அதில் குமாரி 500க்கு 187 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த குமாரி இன்று வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யைக் குடித்துள்ளார். இதையறிந்த பெற்றோர் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குமாரி உயிரிழந்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.