தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்க உள்ள நிலையில், 1996ஆம் ஆண்டு மேலவளவு உள்ளாட்சி தேர்தலின்போது மேலவளவு பொது தொகுதியாக இருந்ததை தனி தொகுதியாக மாற்றம் பெற்றதும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் வெற்றி பெற்றார் என்ற ஒற்றைக் காரணத்திற்காக ஆதிக்க சாதியினர், முருகேசன் மற்றும் அவரது தம்பி உள்ளிட்ட 7 பேர் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அநியாயமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
அந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 13 பேரை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி நன்னடத்தை காரணமாக விடுதலை செய்தது அதிமுக அரசு. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் சாதிய அரசியலை கையில் எடுத்துள்ளாராம். அதற்குதான் இந்த முன் ஏற்பாடுகளாம்.
இதுதொடர்பாக விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு பேசுகையில், இந்த சமூகத்திற்கு வாழவே தகுதியில்லாத குற்றவாளிகளை வெளியில் விட்டால் மீண்டும் சமூக சீர்கேடுகள் நடைபெறும். சாதி ரீதியாக, மத ரீதியாக கும்பலாக கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அந்த வகையில் தர்மபுரி பஸ் எரிப்பும் அடங்கும்.
மேலூர் ஊராட்சி சென்னகரம்பட்டி அம்மாஞ்சி, வேலு கொலை வழக்கில் ராமர் பங்குண்டு அதேபோல இரட்டை ஆயுள் பெற்ற அப்படிப்பட்ட சமூக விரோதியை தான் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
பொது தொகுதியை தனித்தொகுதியாக மாற்றினார்கள். அப்போது சாதிய ஆதிக்க அடக்குமுறையை கையில் எடுத்த விவகாரமே மேலவளவு பிரச்சினை. சாதிய ரீதியாக உள்ளவர்களை வெளியில் அனுப்பினால் பதற்றம் உண்டாகும். இது அரசு சட்டத்திற்கு எதிரானது. ஆகையால் இவர்களை அரசே நன்னடத்தை காரணமாக வெளியில் விடுவது மீண்டும் சாதிய ரீதியாக பதற்றம் ஏற்படுத்தி அதில் அரசியல் செய்யும் வேலையாக உள்ளது. அதேபோல அரசே சாதியத்தை தூண்டும் வகையில் இந்த விடுதலை உள்ளது என்றார்.