Published on 02/12/2019 | Edited on 02/12/2019
சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்அருள், தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்து வந்தார். பிரபல நடிகைகளுடன் இவர் ஆடிப்பாடி நடித்துள்ள அந்த விளம்பரப்படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றதை அடுத்து, தானே சினிமாவில் ஹீரோவாக நடிக்க முன்வந்திருக்கிறார்.
சரவணன் நடித்து தயாரிக்கும் இப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. படத்திற்கு இன்னமும் பெயர் வைக்காததால் தற்போது புரொடக்ஷன் நம்பர் -1 என்று மட்டும் பெயர் வைத்திருக்கிறார்கள். சரவணன் நடித்த விளம்பர படங்களை இயக்கிய ஜேடி-ஜெர்ரி இரட்டை இயக்குநர்களே இப்படத்தை இயக்குகின்றனர். ஹாரிஷ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.