Published on 18/05/2020 | Edited on 18/05/2020

ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் லலிதா ஜூவல்லரியின் கிளைகள் உள்ளன. இந்த மூன்று மாநிலங்களிலும் லலிதா ஜூவல்லரிக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். கரேனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அளிக்கமாறு இம்மாநில முதலமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்தநிலையில் லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் கிரண்குமார், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து முதலதைமச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் காசோலையாக அளித்தார். இதேபோல் தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகரராவை நேரில் சந்தித்து முதலதைமச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் காசோலையாக அளித்துள்ளார். இதேபோல் தமிழகத்திற்கும் நிவாரண நிதி அளித்துள்ளார். தமிழக தலைமைச் செயலாளரை சந்தித்து முதலதைமச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் காசோலையாக அளித்துள்ளார்.