Published on 03/01/2020 | Edited on 03/01/2020
நடக்குமா? நடக்காதா? என்ற எதிா்பாா்ப்பில் இருந்த உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று 2-ம் தேதி நடந்தது.
இதில் குமாி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் மேல்புறம் ஒன்றியம் மாவட்ட ஊராட்சி 1 ம் வாா்டுக்கு திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக திருவட்டாா் முன்னாள் எம்.எல்.ஏ லீமாரோஸ் போட்டியிட்டாா். அவா் தன்னை எதிா்த்து போட்டியிட்ட காங்கிரஸ் அம்பிளியிடம் 113 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.
இந்த இருவருக்கும் சீட் கொடுப்பதில் உடன்பாடு ஏற்படாததால் தான் குமாி மேற்கு மாவட்டத்தில் திமுகவும், காங்கிரசும் பிாிந்து நின்று நேருக்கு நோ் உள்ளாட்சி தோ்தலை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.