![K.N.Lakshmanan](http://image.nakkheeran.in/cdn/farfuture/F0jcpO1UWQdi_M6EmMd6H8CGhcfnPGd_6pIjYhhtoag/1591068992/sites/default/files/inline-images/K.N.Lakshmanan.jpg)
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் (வயது 92) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''தமிழக பா.ஜ.க.,வின் முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் அவர்கள் தனது சேலம் செவ்வாய்பேட்டை இல்லத்தில் மறைவெய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். கொள்கை ரீதியாக மாற்று முகாமில் இருந்தாலும் தலைவர் கலைஞர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க. இடம் பெற்றிருந்தபோது மயிலாப்பூர் தொகுதியில் லட்சுமணன் அவர்கள் வெற்றி பெற்ற நிகழ்வு நிழலாடுகிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு தி.மு.கழகத்தின் சார்பில் ஆறுதலைத் தெரிவிக்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.