வயதான தாய் சுமையென நினைத்து மனைவியோடு சேர்ந்து கொண்டு தாயை கொன்று கொள்ளைபுறத்தில் புதைத்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெறும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கிராமம் வாளவராயன்குப்பத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி, அவரது மனைவி பூசத்தோடு சேர்ந்து கொண்டு, தாயார் உய்யம்மாளை அடிக்கடி சண்டைப் போட்டு உதாசீனப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருந்தனர். அதோடு உய்யம்மாள் வாங்கும் முதியோர் உதவி தொகை பணத்தையும் வாங்கிக் கொண்டு துன்புறுத்தியுள்ளனர். இதை கிராமத்தினர் அடிக்கடி கண்டித்தும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் இரண்டு மாதங்களாக உய்யம்மாளை காணவில்லை. உய்யம்மாவோடு உதவித் தொகை வாங்கும் வயதானவர்கள் "எங்க உய்யம்மாவை இரண்டு மாசமா காணும் " என மகன் கலியமூர்த்தியிடமும், மருமகள் பூசத்திடமும் கேட்டுள்ளனர். அது எங்காவது போயிருக்கும் என்று பூசமும், வெளியூர் போயிருக்கு என மகன் கலியமூர்த்தியும் கூறியுள்ளனர்.
நடக்கவே முடியாத கிழவி ஊறுக்கு போயிடுச்சா நம்பவே முடியலயே என கிராமத் தலைவர்களிடம் கூறியுள்ளனர். அதன் பிறகே காவல்துறையினருக்கு புகார் கொடுத்து கலியமூர்த்தியை விசாரித்தனர்.
அவரோ, "என்னோட அம்மாவுக்கு ரொம்ப வயசாகிடுச்சி, அவங்க வேலைய அவங்களால் செய்து கொள்ள முடியல, அவங்க வேலைய எம் மனைவியும் செய்ய மறுக்கிறா இதனால் அடிக்கடி வீட்டுல சண்டை நடக்கும், ஒரு புறம் பெத்த அம்மா, மறுபுறம் கட்டிக்கிட்ட மனைவி இரண்டுக்கும் இடையில தவிச்சேன், அடிக்கடி என்னவெட்டி விட்டுட்டு உங்க அம்மாவோட குடும்ப நடத்துன்னு நாக்கு கூசாம பேசுவா, கடைசியாக மனச திட படுத்திக்கிட்டு அம்மா வாழ்ந்துட்டாங்க, அவங்க போயி சேரட்டும்னு செய்தேன்.
ஊர்ல யாருக்கும் அம்மா செத்தது சந்தேகம் வந்துட கூடாதுன்னு உசுரோட இருந்த ஆட்டை அடிச்சி கொண்ணு அதோடவே அம்மாவையும் வீட்டுக்கு பின்னாடியே புதைச்சேன் என கூறியுள்ளார். உய்யம்மாளின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளது.