Published on 13/10/2018 | Edited on 13/10/2018

தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்று சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன். இன்று காலை தனியார் கல்லூரியான பாவை பொறியியல் கல்லூரியில் மாணவர்களுடன் உரையாடினார், பிறகு மேட்டூர் சென்ற கமல் அங்குள்ள மேட்டூர் அணை பாலத்தை பார்வையிட்டார். பிறகு ஜலகண்டாபுரம் உட்பட பல கிராமங்களில் பயணம் செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஊரான எடப்பாடிக்கும் செல்கிறார்.