
வைகோவின் 56 ஆண்டுக்கால வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் மாமனிதன் வைகோ என்ற ஆவணப் படத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்வில் பல்வேறு கட்சியின் தலைவர்களும் திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ஏற்புரை ஆற்றிய வைகோ "இந்துத்துவா சக்திகள் சனாதன சக்திகள் சூழ்ந்து வருகிறது. அவற்றை முறியடிக்க மதச்சார்பற்ற சக்திகள் முன்பை விட வேகமாக போராட வேண்டும். தமிழக ஆளுநர் போட்டி ஆட்சி நடத்துகிறார். மசோதாக்களைத் தூக்கி குப்பையில் போடுகிறார். சமஸ்கிருதம் தான் படிக்க வேண்டும் இந்தி தான் படிக்க வேண்டும் என்று சொல்லுகிறார். ஆங்கிலத்துக்கு இடம் இல்லை என்று சொல்லுகிறார்.
குருகுல கல்வியை கொண்டு வருவோம் என்று சொல்லுகிறார். இதை எல்லாம் எதிர்க்க முறியடிக்க மதச்சார்பற்ற சக்திகள் முன்பைவிட வேகமாகப் போராட வேண்டும். நிச்சயம் அவர்களை முறியடிப்போம். இது திராவிட இயக்க பூமி. ரத்தமும் கண்ணீரும் சிந்தி இந்த இயக்கத்தை நாங்கள் கட்டி காத்து வந்திருக்கிறோம். அவ்வளவு எளிதில் எங்களை வீழ்த்தி விட முடியாது" என்று கூறினார்.