Skip to main content

நெடுவாசல் கிராம மக்களை சந்திக்க கமல்ஹாசன் முடிவு!

Published on 24/02/2018 | Edited on 24/02/2018
Kamalahsn


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடும் நெடுவாசல் கிராம மக்களை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த 21ம் தேதி, மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசன், வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். அதைந்தொடர்ந்து நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனையில், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க கமல் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள ஏப்ரல் 4-ஆம் தேதி, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வரும் நெடுவாசல் கிராம மக்களை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும், கிராமங்கள்தோறும் கட்சியை கொண்டு செல்ல உழைக்க வேண்டுமெனவும், கொடிக்கம்பம் நிறுவுவது உள்ளிட்ட கட்சிப்பணிகளுக்கு காவல்துறை அனுமதி உள்ளிட்ட அனைத்தையும் முறையாக பெற வேண்டுமென நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறுது.

சார்ந்த செய்திகள்