Published on 30/01/2019 | Edited on 30/01/2019
மறைந்த தி.மு. க. தலைவர் கலைஞர் முழு உருவ சிலை திறப்பு விழா நிகழ்ச்சி ஈரோட்டில் இன்று மாலை 6.30க்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலைஞர் சிலையை திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின். நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, இளைஞர் அணி மாநில செயலாளர் மு.பெ. சாமிநாதன் தி.மு.க. மா.செ.க்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.