
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கும், ஊராட்சி அளவிலான வறுமை ஒழிப்பு சங்கத்தினருக்கும், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினருக்கு தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் மணிமேகலை விருது வழங்கி வருகிறது.
அதன்படி 2022-23ம் ஆண்டிற்கான மணிமேகலை விருது வி.புதுக்கோட்டையைச் சேர்ந்த தாமரை சுய உதவிக்குழுவிற்கும், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த ஓம்சக்தி குழுவினருக்கும், பெரியம்மாபட்டியைச் சேர்ந்த துளசி சுயஉதவிக் குழுவினருக்கும் தலா ரூ.25ஆயிரம் மற்றும் விருது மற்றும் பாராட்டு சான்றிதழும், இதுதவிர வத்தலக்குண்டு ஒன்றியத்தில் கிராம அளவிலான வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு விருதும், ரூ.50ஆயிரமும், நிலக்கோட்டை ஒன்றியத்தில் கோடாங்கிபட்டியைச் சேர்ந்த ஊராட்சி அளவிலான வறுமை ஒழிப்பு சங்கத்தினருக்கு ரூ.1லட்சமும் பதக்கமும், பாராட்டு சான்றிதழையும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி வழங்கி வாழ்த்தினார்.
அப்போது சுய உதவிக்குழுவினர் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழகத்தில் முதன் முதலாக தர்மபுரியில் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி பெண்களை சொந்த காலில் நிற்க வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். இன்று அவர் வழியில் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆயிரக்கணக்கான சுய உதவிக்குழுக்களுக்கு கோடிக்கணக்கில் நிதி உதவி வழங்கி பெண் இனத்தை முன்னேற்றி உள்ளார் என்று கூறினார்.
நிகழ்ச்சியின்போது தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ப.க.சிவகுருசாமி, மகளிர் திட்ட இயக்குநர் எஸ்.சதீஷ்பாபு, உதவி இயக்குநர் ராம்குமார், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் செழியன், வேடசந்தூர் அமைச்சரின் உதவியாளர் ஹரிகரன், சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலக அலுவலர் வடிவேல் முருகன், திமுக நிர்வாகி அம்பை ரவி, திண்டுக்கல் மாநகர பொருளாளர் மீடியா சரவணன், திண்டுக்கல் பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார், பஜ்ருல்ஹக், கூட்டுறவு வளர்ச்சி அலுவலர் கணேசன், ரெட்டியார்சத்திரம் நிலவலவங்கி முன்னாள் செயலாளர் சக்கரவர்த்திமணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் டென்னி, கே.எஸ்.அக்பர், கலையரசன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெல்லூர் மலைச்சாமி, அகரம் பேரூராட்சிமன்ற தலைவர்கள் நந்தகோபால், ரேகா அய்யப்பன், ஸ்ரீராமபுரம் சகிலாராஜா, மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் பொன்முருகன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் பாறைப்பட்டி வாஞ்சிநாதன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் கும்மம்பட்டி விவேகானந்தன், பஞ்சம்பட்டி மணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் கே.சி.பட்டி ஐய்யப்பன், பண்ணைப்பட்டி அருண், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் புதுக்கோட்டை ரமேஷ், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர்கள் மார்த்தாண்டன், நெல்லை சுபாஷ், ஆனந்த், பேரூர் கழக செயலாளர்கள் சின்னாளபட்டி மோகன்ராஜ், நகர திமுக நிர்வாகி நந்தி நடராஜன், நரசிங்கம், வீரபாண்டி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.