Published on 14/12/2018 | Edited on 14/12/2018

மறைந்த வன்னியர் சங்க தலைவர் குருவுக்கு, அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், காடுவெட்டி கிராமத்தில், பா.ம.க. சார்பில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடந்தது.
இந்த விழாவில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில இளைஞர் அணி தலைவர் அன்புமணிராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.