Skip to main content

பட்ட பகலில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகை, ரூ. 25 ஆயிரம் பணம் கொள்ளை

Published on 01/08/2018 | Edited on 27/08/2018
Jewelry, money robbery


பழைய இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டுகளை உடைத்து 55 பவுன் சங்க நகைகள், ரூ. 25 ஆயிரம் பணம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாலையில் வசிப்பவர் காளைச்சாமி (45). இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்யப்பட்டது. இவர் காந்திஜி சாலையில் பழைய இரும்பு வியாபாராம் செய்து வருகிறார். வியாபாரத்தில் அவருக்கு துணையாக அவரது மனைவி மற்றும் மகன்கள்  உள்ளனர். 
 

    இந்த நிலையில் நேற்று மதியம் காளைச்சாமி குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு கடைக்கு சென்று மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு படுக்கை அறையில் இருந்த 2 இரும்பு பீரோக்களை உடைத்து அதற்குள் இருந்த துணிகளை அள்ளி வீசிவிட்டு பீரோக்களில் பர்ஸ்களில் இருந்த காளைச்சாமியின் தங்க சங்கிலிகள், ஆரண், மோதிரங்கள் மற்றும் அவரது மகள் திருமணத்திற்கு அன்பளிப்பாக வந்த நகைகள் அடங்கிய பை, மகளின் நகைகள் இருந்த பைகள் அனைத்திலும் இருந்த 55 பவுண் தங்க நகைகள் எடுத்த கொள்ளையர்கள் அதே பீரோவில் இருந்த ரூ. 25 ஆயிரம் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். 
 

    மேலும் திருடர்கள் வீட்டின் முன் பக்கமாக வராமல் பக்கவாட்டில் உள்ள முள் வேலியை தாண்டி சுற்றுச்சுவர் மறைவில் இருந்து பின் பக்க கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். மேலும் காளைச்சாமி வீட்டிற்கு பாதுகாப்பிற்காக வளர்த்து வந்த நாயை நேற்று முன்தினம் மதியம் முதல் காணவில்லை. சில இடங்களில் பச்சை கலரின் நாய் வாந்தி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே கொள்ளைகள் பல நாட்களாக காளைச்சாமி வீட்டை நோட்டம் பார்த்துவிட்டு நாளை முதல் நாளே விஷம் கொடுத்து கொன்று தூக்கி சென்றவிட்டு ஆள் இல்லாத நேரத்தில் நகை, பணத்தை கொள்ளி அடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 

    கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் 55 பவுன் நகை கொள்ளை நடந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலிஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை செய்தனர். சந்தேகமுள்ள நபர்களின் பெயர்களை வாங்கிய போலிசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரனை செய்து வருகின்றனர். பட்டபகலில் நடந்த கொள்ளை சம்பவத்தால் கீரமங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்