Skip to main content

'வேற எதாவது சொல்லனுமா சம்பத்?' ஜெ.வுடனான சந்திப்பு பற்றி நாஞ்சில் சம்பத்...

Published on 05/12/2018 | Edited on 05/12/2018
jayalalitha-nanjil-sampath



ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரை சந்தித்தது, அதிமுகவில் தான் பணியாற்றியது குறித்து நினைவுகளை பகிர்ந்துகொண்டார் இலக்கியவாதியான நாஞ்சில் சம்பத்.
 

''முதல் முதலாக கட்சியில் இணைத்துக்கொள்வதற்காக சந்தித்த அன்று ராகுல சாங்கிருத்தியாயனுடைய "சிந்து முதல் கங்கை வரை" புத்தகத்தை ஜெயலலிதா கையில் கொடுத்தேன். 'நல்ல புக் சம்பத்' என்றார். 'நான் இதை இங்கிலீஷில் படிச்சிருக்கேன். தமிழிலும் படிக்கணும்' என்று சொல்லி வாங்கி கையில் வைத்துக்கொண்டார். 
 

என்னை சரிக்கு சமமாக உட்கார வைத்து 'சம்பத்துக்கு குடும்பத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க' என்றார். என்னுடைய மகள் எம்.பி.பி.எஸ். படிக்க ஆசைப்பட்டாள். அதற்கு உரிய பொருளாதார வசதி இல்லை. அதனால் நேச்சுரோபதி டாக்கடராக இடம் வாங்கி படித்துக்கொண்டிருக்கிறாள். என்னுடைய மகன் 10ஆம் வகுப்பில் 480 மதிப்பெண்கள் பெற்றான். இப்பொழுது 12ஆம் வகுப்பு எழுதப்போகிறான். இதில் அவன் மெரிட்டில் வந்துவிடுவான் என்று நான் கருதுகிறேன். அப்படி வராவிட்டால் எனது மகன் எம்.பி.பி.எஸ். படிப்பு படிக்க ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்று நான் கேட்டேன். 

 

jayalalitha-nanjil-sampath



வைகோ எனக்கு தந்த நெருக்கடியில் நான் ஒரு முட்டுச்சந்தில் நிற்பது மாதிரி இந்த நிலைமைக்கு ஆளாக்கப்பட்டதால் நிச்சயிக்கப்பட்ட எனது மகள் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டது முடியவில்லை. அதனால் ரத்த சொந்தமுள்ள நூறு பேருக்கு சொல்லி எளிய முறையில் என்னுடைய மகளின் திருமணத்தை என்னுடைய கிராமத்தில் மே மாதம் 12ஆம் தேதி நடத்தப்போகிறேன். இதுதான் என்னுடைய குடும்பத்தின் நிலைமை என்று நான் சொன்னபோது, 'மகளுக்கு கல்யாணமா? தலைநகர் சென்னையில் வரவேற்பு வையுங்க. நானே நேரில் வந்து வாழ்த்துகிறேன்.' மிகுந்த மகிழ்ச்சியோடும், கருணையோடும் கூறினார்.
 

என்னால் அது முடியாது. அவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துவதற்கான வசதிகள், வாய்ப்பெல்லாம் கிடையாது என நினைத்தபோது, அதற்குள் 'நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நானே பண்ணுகிறேன்' என்றார். சென்னையில் நிகழ்ச்சியை வையுங்கள், நானே ஏற்பாடு செய்கிறேன். நான் நேரில் வந்து வாழ்த்துகிறேன் என்று வெளிவந்த கருணையை நினைத்து நினைத்து நான் நெகிழ்கிறேன். அதற்கு பிறகு நான் அவரிடத்தில் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. 
 

'வேற எதாவது சொல்லனுமா சம்பத்?' என்று கேட்டார். 'ஓன்னுமில்லம்மா என் மேல 49 வழக்கு இருக்கு?' என்றேன். 'யார் போட்ட வழக்கு?' என்று கேட்டாங்க. 'நீங்க போட்டது பாதி, மீதி போட்டது கலைஞருன்னு' சொன்னேன். வாய்விட்டு சிரிச்சாங்க. இதையெல்லாம் நான் மறக்க முடியாது.'' 

 

 

 

சார்ந்த செய்திகள்