Skip to main content

'ஜெ' நினைவிடம் திறப்பு... காமராஜர் சாலையில் குவிந்த அதிமுகவினர்! (படங்கள்)

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று (27.01.2021) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

 

மெரினாவில் 50,422  சதுர அடியில், 80 கோடி செலவில் ஃபீனிக்ஸ் பறவையின் வடிவத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்படுகிறது. இந்த நினைவிட திறப்பு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஜெயலலிதா நினைவிடத்தின் முகப்பில் 'மக்களால் நான் மக்களுக்காக நான்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக தொண்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர். 

 

 

 'J' memorial opening ... AIADMK gathered on Kamaraj Road!

 

காமராஜர் சாலை முழுவதும் கட்சியினர் திரண்டுள்ளதால் பொதுப்போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த வழியில் செல்லும் அரசு பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. சாந்தோமிலிருந்து பட்டினம்பாக்கம் வழியாகவும், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாகவும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.

 

கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் கூடியுள்ளதாலும், தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் தீவுத்திடல், சென்னை பல்கலைகழக வளாகம், பட்டினம்பாக்கம் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் திரள்வதால் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   

 

சார்ந்த செய்திகள்